ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பாக 30.01.2025 அன்று மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கலை இலக்கியப் போட்டிகள் ‘மகிழ் மாலை – 2025’ நடைப்பெற்றது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் பெ.இராஜகுரு அவர்கள் குத்து விளக்கேற்றி தொடக்கவிழாவின் தலைமையுரை ஆற்றிச் சிறப்பித்தார்.
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி மஞ்சு வரவேற்புரை ஆற்றினார். “விவசாயம்: நேற்று – இன்று – நாளை” எனும் பொருண்மையிலான இக்கலை இலக்கிய விழாவின் நோக்கவுரையினை தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி) முனைவர் பி.ஸ்ரீதேவி அவர்கள் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, வண்ணக்கோலப் போட்டி, பரதம், நாட்டுப்புறப் பாடல், நெருப்பில்லா சமையல், குறும்படம், நாட்டுப்புற நடனம் எனும் எட்டு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. ஏறத்தாழ 11 கல்லூரிகளிலிருந்து 132 மாணவர்கள் இப்போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு திறம்பட தங்களின் தனித்திைறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
நிறைவு விழாவில் கல்லூாித் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாாி முனைவர் நாதன் அவர்கள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். ஒட்டு மொத்த புள்ளிகளின் கணக்கீடுபடி அதிக அளவு புள்ளிகள் பெற்று ‘மகிழ் மாலை – 2025’ எனும் மாநில அளவில் நடைப்பெற்ற கல்லூாிகளுக்கு இடையிலான கலை இலக்கியப் போட்டிகளின் வெற்றிக் கோப்பையினை கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். கல்லூரி மாணவர்கள் பெற்றுச் சென்றனர்.
நிகழ்வின் நிறைவாக, முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் செல்வன் முத்து மாணிக்கம் நன்றியுரை வழங்கினார்.
தமிழ்த்துறை (சுயநிதி) உதவிப்பேராசிாியர்கள் திருமதி பா.நாகேஸ்வரி, முனைவர் கி. நாகேந்திரன் ஆகிய இருவரும் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர். தமிழ்த்துறைப் பேராசிாியர்கள் அனைவரும் இணைந்து இந்நிகழ்வினை மிகச்சிறப்பாக நடத்தினர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.