ஸ்ரீ எஸ் .இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரித் தமிழ்த்துறையும், விருதுநகர் மாவட்டக் கரிசல் இலக்கியக் கழகமும் இணைந்து நடத்திய கரிசல் இலக்கியவிழா அறிமுகக் கூட்டம் 05.12. 2024 அன்று புதிய கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
முதல்வர் முனைவர் பெ.இராஜகுரு அவர்களின் தலைமையில் விழா இனிதே துவங்கியது. தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி)
முனைவர் பி. ஸ்ரீதேவி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மூ.கவிதா அவர்கள் நோக்க உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து கரிசல் இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு எஸ்.காமராஜ் அவர்கள் அறிமுகவுரை ஆற்றினார்.
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி.நாகேந்திரன் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
கரிசல் இலக்கிய விழாவின் முக்கியத்துவம் மற்றும் கரிசல் மண்ணின் படைப்புகளையும், படைப்பாளர்களையும் குறித்த ஓர் அறிமுகப் பார்வையை மாணவர்கள் பெற்று மகிழ்ந்தார்கள்.