ஸ்ரீ எஸ்.இராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரி (தன்னாட்சி ), தமிழ் துறை (சுயநிதி) மற்றும் சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம், 21.10.2024 அன்று புதிய கருத்தரங்க அறையில் நடைபெற்றது. முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்களின் தலைமையில், மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது.
தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி),முனைவர் பி. ஸ்ரீதேவி வரவேற்புரையாற்றினார். இலங்கை ,தமிழ் மொழித்துறை,தேசிய கல்வி நிருவகத்தின்இயக்குனர் சிறப்பு விருந்தினர் முனைவர் முருகு. தயாநிதி, அவர்கள், சிறப்புரை யாற்றினார்.

அவரைத் தொடர்ந்து நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறை, தில்லி பல்கலைக்கழகதைதின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு. உமாதேவி அவர்கள், சிறப்புரையாற்றினார்.
அதன் பின்னர் கருத்தரங்க அமர்வுகள் துவங்கியது. இராஜபாளையம், இராஜுக்கள் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் வி. கலாவதி அவர்கள் அமர்வுத் தலைமையுரையாற்றினார்.
அவரின் தலைமையின் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 28 பேராளர்கள் தங்களுடைய ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தார்கள். அவர்கள் அனைவரும் மாணவர்களுக்கு பயனுள்ள பல அரிய தகவல்களை தங்களின் ஆய்வு கட்டுரைகள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள். மாணவர்களுக்கு பயன் தரத்தக்க வகையில் அவ்ஆய்வுக்கட்டுரைகள் அமைந்தன. தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி. ஆ. முருக லட்சுமி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நொறைவேறியது.