Home Arts Tamil தமிழ்த்துறை முதுகலை மாணவர்கள் மாநிலம் தழுவிய அளவில் குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்று வந்துள்ளனர்

தமிழ்த்துறை முதுகலை மாணவர்கள் மாநிலம் தழுவிய அளவில் குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்று வந்துள்ளனர்

ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியின் தமிழ்த்துறை முதுகலை மாணவர்கள் மாநிலம் தழுவிய அளவில் குறும்படப் போட்டியில் முதல் பரிசை வென்று வந்துள்ளனர்.

02.08.2024  அன்று  Epiphany  Pastoral Center  எனும் அமைப்பால் ‘செயற்கை நுண்ணறிவும் இதயத்தின் ஞானமிக்க மானிடத் தொடர்பும்’ எனும் பொருண்மையிலான குறும்படப் போட்டி, SIGNS TAMILNADU cum SHORT FILM FESTIVAL 2024 என்னும் பெயரில் நடைபெற்றது.

இப்போட்டிக்கான தலைப்பில் கிட்டத்தட்ட 48 குறும்படங்கள் இடம் பெற்றது. அப் படங்களுள் முதன்மை இடம் பிடித்தது, நம் முதுகலைத் தமிழ் மாணவர்கள் எடுத்த ‘இளசுகள்’ என்கின்ற விழிப்புணர்வு குறும்படம்.

இப்படத்தை இயக்கியது முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் ச.மதன்குமார். படத்தில் நடித்த முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவர்கள் வை. சித்தநாதன், ச.அருண்குமார், முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு மாணவன் அழகுமுத்துராஜ்.

இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மு. தமிழ்ச்செல்வன், ரா. அமர்நாத், மு .கருப்பசாமி, இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவன் வ. தங்கேஸ்வரன்.

குறும்படப் போட்டியில் நேரில் சென்று கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல், மாணவர்களை வாழ்த்தி அனுப்பிய கல்லூரி முதல்வர் பெ. இராஜகுரு  அவர்களுக்கும், துறைத்தலைவர் முனைவர் பி. ஸ்ரீதேவி அவர்களுக்கும், பேராசிரியர் ஆ. முருகலட்சுமி அவர்களுக்கும் மாணவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

Exit mobile version