Home Arts Tamil போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவும் நா. சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியும் இணைந்து 26.07.2024 அன்று போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். கல்லூரி முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்களின் ஒப்புதலின் கீழ் இந்நிகழ்வு நா. சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் முதுநிலைத் தமிழாசிரியர் இராஜசேகரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் தலைமையுரையினை பள்ளியின் தலைமையாசிரியர் க. முனியப்பன் அவர்கள் வழங்கினார்.
போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு சிறப்பு சிறப்புரையினை கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி) முனைவர் பி. ஸ்ரீதேவி அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்துக்களைத் தமது உரையின் மூலமாகவும், நாட்டு நாட்டுப்புறப் பாடல் வழியாகவும் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் கி. நாகேந்திரன் அவர்கள் வழங்கினார்.

நம் முதுகலைத்தமிழ் மாணவர்கள் தயாரித்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த மூன்று குறும்படங்கள் காணொளியாகத் திரையிடப்பட்டன.

மேலும், கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் செல்வி பா. நாகேஸ்வரி அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட நாடகமும் மாணவர்களால் அங்கு அரங்கேற்றப்பட்டது. நிறைவாக, கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி. அ. முருகலட்சுமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Exit mobile version