Home Arts Tamil கருத்தரங்கம் – தொல்காப்பியச் செல்வம்

கருத்தரங்கம் – தொல்காப்பியச் செல்வம்

சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பில், 13.08.2024 அன்று ‘தொல்காப்பியச் செல்வம்’ எனும் பொருண்மையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்களின் வழிகாட்டுதலின் படி இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது. முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சு. விஜயலட்சுமி வரவேற்புரை நல்கினார். முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி மு. மதுபாலா சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுகவுரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து ‘தொல்காப்பியச் செல்வம்’ என்னும் தலைப்பில் மதுரை, தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் அ.செந்தில்நாராயணன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

தமிழ்மொழியின் இலக்கண வகைமைகள் தொடங்கி, அதிலும் குறிப்பாய் தொல்காப்பியரின் நுண்மான் நுழைபுலம் குறித்த செறிந்த கருத்துக்களை மாணவர்களிடையே ஆய்வு நோக்கில் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தொல்காப்பியம் குறித்த மாணவர்களின் ஐயங்கள் தெளியும் வண்ணம், சிறந்த முறையில் அதன் இயல் அமைப்புகளைத் தொல்காப்பியர் அமைத்த வழி விளக்கிக் காட்டிய தன்மை மாணவர்களை மகிழ்வித்தது.

சிறப்புவிருந்தினரின் உரை நிகழ்விற்குப் பின்னர் மாணவர்கள் தொல்காப்பியம் குறித்த தங்கள் ஐயங்களை வினாக்களாகக் கேட்டு அதற்குத் தகுந்த விடைகள் பெற்றுத் தெளிவு பெற்றனர். முதுகலைத்தமிழ் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி சீ.ஹேமவர்ஷினி நன்றியுரை வழங்கினார்.

தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பி.ஸ்ரீதேவி அவர்கள் இந்நிகழ்வினை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்துச் சென்றார். நாட்டுப் பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.

Exit mobile version