ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவின் சார்பில், 26.09.2024 வியாழக்கிழமை அன்று நம் கல்லூரி தமிழ்த்துறை “மாணவர் மன்றம் 2024” நிகழ்ச்சி நடைபெற்றது.

இளங்கலை, முதுகலைத்தமிழ் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். முற்பகலில் பேச்சு, பாட்டு, மௌனமொழி நடிப்பு, கோலம், நெருப்பில்லா சமையல், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
பிற்பகலில் கலாச்சார நடனப்போட்டி நடைபெற்றது. இதன் பின்பு நிறைவு விழா முதல்வர் முனைவர்.பெ. இராஜகுரு அவர்களின் தலைமையில் துவங்கியது.
முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி பா.முனீஸ்வரி வரவேற்புரை வழங்க, நிகழ்ச்சியின் நோக்க உரையினை தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி) முனைவர் பி.ஸ்ரீதேவி அவர்கள் வழங்கினார்கள். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் முதல்வர் அவர்களால் வழங்கப்பட்டது.


நிகழ்வில் முதுகலைத்தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் ச.திருமலைக் கிருஷ்ணன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது. விழாவின் நிகழ்வுகளை முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்கள் ஐ.பேச்சியம்மாள், ச.அருண்குமார் ஆகிய இருவரும் தொகுத்து வழங்கினர். கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் முதல்வர் அவர்களின் அனுமதியுடனும், துறைத்தலைவர் அவர்களின் நெறிப்படுத்துதல் மூலமூம், சகப் பேராசிரியர்களின் ஒத்துழைப்புடனும் இந்நிகழ்வு இன்தே நிகழ்ந்தது.
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் திருமதி பா.நாகேஸ்வரி அவர்கள் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு மாணவர்களை நன்முறையில் பங்கேற்கச் செய்தார்.
