ஸ்ரீ எஸ் .இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரித் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பாக பாரதியின் 142 வது பிறந்தநாள் விழா 11.12.2024 அன்று கொண்டாடப்பட்டது. முதல்வர் முனைவர் பெ. இராஜகுரு அவர்களின் வழிகாட்டுதலின்படி வழிபாட்டுக் கூட்டத்தின் போது மாணவர்களின் கலைநிகழ்வுகளும், மதிய அமர்வில் சிறப்பு விருந்தினர் உரையுமாக பாரதி விழா கொண்டாடப்பட்டது.

வழிபாட்டுக் கூட்டத்தில் முதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவன் அருண்குமார் பாரதி உரையினையும், முதுகலை மற்றும் இளங்கலைத்தமிழ் மாணவியர்கள் பாரதியின் பாடலைப் பாடியும், பாரதியின் பாடலுக்கு ஆடியும் மாணவர்களின் முன்பு, பாரதியின் இருப்பை நினைவுபடுத்திப் புதுவிதமான ஒரு கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள்.

பிற்பகல் 2 மணி அளவில் பழைய கருத்தரங்க அறையில் பாரதி விழாவின் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. முதல்வர் முனைவர் பெ.இராஜகுரு அவர்களின் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி ச.முருக லட்சுமி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி) முனைவர் பி. ஸ்ரீதேவி அவர்கள் நோக்கவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் பொ. இராமநாதன் ஐயா அவர்கள் ‘சிந்தை தெளிவாக்கு’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

முதுகலைத்தமிழ் முதலாம் ஆண்டு மாணவி பா.இராஜேஸ்வரி நன்றியுரை கூறினார். முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவிகள் ம. பிரமிளா தேவி, ஐ.பேச்சியம்மாள் ஆகிய இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவேறியது. சிறப்பு விருந்தினரின் சிறப்புரை மாணவர்களுக்கு, பாரதியின் அறியாத பல பக்கங்களை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. சொற்சுவையும், நெகிழ்ச்சியும், இலக்கிய நயமும் நிறைந்த சிறப்பு விருந்தினரின் உரையாற்றலில் மாணவர்கள் கட்டுண்டு இன்பம் அடைந்தார்கள்.