சாத்தூர் ஸ்ரீ எஸ். இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பில், 2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான இலக்கிய மன்றத் துவக்க விழாவானது 25.07.2024 அன்று நடைபெற்றது. முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி வீரபையம்மாள் வரவேற்புரை நல்கினார்.

கல்லூரி முதல்வர் பெ. இராஜகுரு அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து, ‘எண்ணங்களே ஏணிப்படிகள்’ என்னும் தலைப்பில் சிவகாசி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ. கிளிராஜ் அவர்கள் மாணவர்களிடையே சிறப்புரை வழங்கினார். வாழ்வின் வெற்றிக்கு எண்ணங்களே முதன்மையானவை எனும் கருத்தை, புத்தர் மற்றும் வள்ளுவரின் கருத்துக்களின் வழி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.


முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி இராதிகா நன்றியுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பி. ஸ்ரீதேவி அவர்கள் இந்நிகழ்வினை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்துச் சென்றார். நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு இனிது நிறைவேறியது.